எங்கள் இனம்
******************
மேடையில் முழங்கினார் தலைவர்:
"எங்கள் இனப் பெரியவருக்கு
ஏன் இன்னும் சிலை இல்லை?"
மாநாட்டில் தீர்மானம்....
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட்ம்...
கண்டனப் பேரணி.....
உண்ணாவிரதம்....
ஊர்வலப் போராட்டம்...........
தேர்தல் நெருங்கி வர,
அனுமதி கிடைத்தது,
திறப்பு விழா !
வெகு விமரிசையாய்!!
பாராட்டுக்கள் குவிந்தன,
சிலை திறந்த சீர்திருத்தவாதி,
குரல் கொடுத்த தலைவர்,
அரசு அதிகாரிகள்,
ஆளுங்கட்சி பிரமுகர்கள்
என அனைவருக்கும்-
சிலையாய் நின்றவருக்குத் தவிர!
இதோ-
கூத்து முடிஞ்சாச்சு!
குழுமியவர் போயாச்சு!!
இனி,
அடுத்தது அவருடைய
பிற்ந்த நாளோ,
நினைவு நாளோ
வரும் வரை
சிலையாய் சிரிப்பவருக்கு துணை
எச்சமிட வரும் பறவை இனம் மட்டுமே!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment