Tuesday, July 22, 2008

நெஞ்சின் சுமைகள் ******************* நீ உடனிருந்த பொழுது உலகைப் பார்த்து உரைத்தேன்- "என்னவள் மட்டும் என் உலகு" என்று. நீ என்னை உதறி விட்டு சென்ற பொழுது உலகு உரைக்கிறது- "அவன் ஒரு பைத்தியக்காரன் " என்று. பூவிதழ்களில் எல்லாம் தீ சுட்ட வடுக்கள்: ஆம், என் நெஞ்சமெனும் பூவிதழ்களில் எல்லாம் நீ சுட்ட வடுக்கள்: மூங்கிலில் துளை செய்தால் புல்லாங்குழல் ஆகும்; நீ, குழலையே துளைத்து விட்டு இசை வேண்டுமெங்கிறாய். எப்படியடி சாத்தியம்? கதறியழுத பின்னாலும் கண்ணீர் நதி காயாது; கவிதை நூறு வடித்தாலும் காதல் காயம் ஆறாது: கையிலே சுமை இருந்தால் இறக்கி வைக்க வ்ழியுண்டு; நெஞ்சத்தின் சுமைகளை இறக்கி வைக்க வழியேது? உன் நினைவென்னும் மூட்டைகளின் பாரம் அழுத்துகையில் நான் வாழ்க்கை நதியைக் கடப்பது எப்படி? ************************

No comments: