Tuesday, July 29, 2008

ஹைகூ கவிதைகள்:
*******************

கருணை
**********

காற்றே!
கருணை செய்க!!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!


***********

தேர்தல்
*******

சுவர்களுக்கு
சுண்ணாம்புக் குளியல்-
தேர்தல் வந்தாச்சு!

**************

கரையேற்றம்
***********

திருமதி ஆகி விட்ட மகள்
கல்யாணக் கரையில்-
பெற்றோர் கடனென்னும் கடலில்!!

********************
கவிதைக்கு ஓர் கவிதை
***********************

நாட்டின் விடுதலைக்கு
ஓர் கவிதை-அன்றாடம்
வீட்டில் சிறைப்பட்ட
வஞ்சியரின் விடுதலைக்கு
ஓர் கவிதை-பூத்து
வரும் இயற்கையினைப்
பாராட்டி ஓர் கவிதை-
சோற்றுக்கில்லாத சோகத்தை
சொல்லிடும் ஓர் கவிதை-
அதனால் உண்டான தார்மீக
கோபத்தை கொட்டிடும்
ஓர் கவிதை-
பாஞ்சாலியின் சபதத்தை
பகர்ந்திடுவது ஓர் கவிதை!
பாரதத்தின் பெருமையினை
புகன்றிடுவது ஓர் கவிதை!
சாதி மத பேதங்களை
சாடிடுவது ஓர் கவிதை!
சிறு பிள்ளைகளும் களித்திடவே
நீதி சொல்லும் ஓர் கவிதை!
காதல் தருகின்ற இன்பத்தைக்
காட்டுகின்ற கவிதை!
கண்ணனையே எல்லாமாய்
காட்டுகின்ற கவிதை!
புரட்சியின் மேன்மையை
போற்றிடுமோர் கவிதை!
குயிலின் கீதத்தில்
கரைந்திடுமோர் கவிதை!


பாரதி!

நீ பாடாத பொருளில்லை;
அதனால் எங்கள்
பாட்டின் பொருள்
நீயன்றி வேறில்லை;
நீயே ஓர் கவிதை!
இது உனக்கு நாம்
அஞ்சலி செய்யும் சிறுவிதை!

Monday, July 28, 2008

I'm on my way!

The place
I have to reach
is long, so long;
The path
I have to tread
is dark, so dark;

The load
I have to carry
is heavy, so heavy;
There is no one
to accompany
in my journey;

Never mind!
Never mind!!

There, at a distance
shines a flash;
Though slow,
my steps are leading
surely there;

With confidence as torch
and efforts as path
my journey has started;
I'm on my way;

Oh! my friends,
please wait there,
Within very short time,
I'll join you there!!!

***********

Wednesday, July 23, 2008

மழலைகள்
***********

சின்னஞ்சிறு முத்துக்கள்
சிந்திடும் நல்முத்தங்கள்
சிரிக்கும் முல்லை அரும்புகள்
சுகமாய் வீசும் தென்ற்ல்கள்!

சிறகில்லாத புறாக்கள்
சுருதியுடன் கூடிய பாடல்கள்
சுழித்து ஓடும் ஆறுகள்
சாதிகள் தெரியா மேதைகள்!!

சரிந்து விழுகின்ற அருவிகள்
சங்கீதம் பாடும் குயில்கள்
சத்தியம் பேசும் அரிச்சந்திரர்கள்
சமரச மொழியின் எழுத்துக்கள்!!!

எங்கள் இனம்

எங்கள் இனம்
******************



மேடையில் முழங்கினார் தலைவர்:
"எங்கள் இனப் பெரியவருக்கு
ஏன் இன்னும் சிலை இல்லை?"
மாநாட்டில் தீர்மானம்....
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட்ம்...
கண்டனப் பேரணி.....
உண்ணாவிரதம்....
ஊர்வலப் போராட்டம்...........

தேர்தல் நெருங்கி வர,
அனுமதி கிடைத்தது,
திறப்பு விழா !
வெகு விமரிசையாய்!!
பாராட்டுக்கள் குவிந்தன,
சிலை திறந்த சீர்திருத்தவாதி,
குரல் கொடுத்த தலைவர்,
அரசு அதிகாரிகள்,
ஆளுங்கட்சி பிரமுகர்கள்
என அனைவருக்கும்-
சிலையாய் நின்றவருக்குத் தவிர!


இதோ-
கூத்து முடிஞ்சாச்சு!
குழுமியவர் போயாச்சு!!
இனி,
அடுத்தது அவருடைய
பிற்ந்த நாளோ,
நினைவு நாளோ
வரும் வரை
சிலையாய் சிரிப்பவருக்கு துணை
எச்சமிட வரும் பறவை இனம் மட்டுமே!

Tuesday, July 22, 2008

நெஞ்சின் சுமைகள் ******************* நீ உடனிருந்த பொழுது உலகைப் பார்த்து உரைத்தேன்- "என்னவள் மட்டும் என் உலகு" என்று. நீ என்னை உதறி விட்டு சென்ற பொழுது உலகு உரைக்கிறது- "அவன் ஒரு பைத்தியக்காரன் " என்று. பூவிதழ்களில் எல்லாம் தீ சுட்ட வடுக்கள்: ஆம், என் நெஞ்சமெனும் பூவிதழ்களில் எல்லாம் நீ சுட்ட வடுக்கள்: மூங்கிலில் துளை செய்தால் புல்லாங்குழல் ஆகும்; நீ, குழலையே துளைத்து விட்டு இசை வேண்டுமெங்கிறாய். எப்படியடி சாத்தியம்? கதறியழுத பின்னாலும் கண்ணீர் நதி காயாது; கவிதை நூறு வடித்தாலும் காதல் காயம் ஆறாது: கையிலே சுமை இருந்தால் இறக்கி வைக்க வ்ழியுண்டு; நெஞ்சத்தின் சுமைகளை இறக்கி வைக்க வழியேது? உன் நினைவென்னும் மூட்டைகளின் பாரம் அழுத்துகையில் நான் வாழ்க்கை நதியைக் கடப்பது எப்படி? ************************
ஹைகூ கவிதைகள்


முரண்

சிக்னலுக்காக காத்திருக்கும்
புத்தம் புது வண்டி-
வெளியே வெயிலில்
பிச்சை எடுக்கும்
பிஞ்சு விரல்கள்-
உள்ளே ஒய்யாரமாய்
வாலாட்டியபடி
"டாமி" !

******************************