Sunday, April 17, 2011

nenjin sumaigal

நீ உடனிருந்த போது உலகைப் பார்த்து நான் உரைத்தேன்: "என்னவள் மட்டும் போதும்; உலகெனக்கு வேண்டாம்" என்று. நீ என்னை உதறிவிட்டுச் சென்ற பிறகு உலகு என்னைப் பார்த்து உரைக்கிறது: "அதோ போகிறான் பார், பைத்தியக்காரன்" என்று. பூவிதழ்களில் எல்லாம் தீ சுட்ட வடுக்கள்; ஆம், என் நெஞ்சமெனும் பூவிதழ்களில் எல்லாம் நீ சுட்ட வடுக்கள்; மூங்கிலில் துளை செய்தால் புல்லாங்குழல் ஆகும். நீயோ, குழலையே துளைத்து இசை வேண்டுமென்கிறாய், எப்படி இது சாத்தியம்? கையிலே சுமை இருந்தால் இறக்கி வைக்க வழியுண்டு; நெஞ்சத்தின் சுமைகளை இறக்கி வைக்க வழி ஏது? உன் நினைவென்னும் மூட்டைகளின் பாரம் அழுத்துகையில் வாழ்க்கை நதியை நான் கடப்பது எப்படி? நிலாச்சாரல் sreedhar4/6/2011 , 12:43:59 PM கவிதை அருமை priya4/8/2011 , 10:03:05 PM really it was too good especially the mans crying about her memories was too hurting , my eyes filled with tears

Thursday, July 1, 2010

அகம் அறிந்த முகங்கள்..........

தொழில்நுட்ப முன்னேற்றம்..
தொலைத்தொடர்பு பரிமாற்றம்...
பார்ப்பவரிடமெல்லாம் கைபேசி...
செல்லுமிடமெல்லாம் செல்பேசி..

அக்கம்பக்க இருக்கைகளில்
அருகமர்ந்து பயணிக்கையில்,
அன்புப் பார்வையில் துவங்கி
அரட்டைக் கச்சேரிகள் - அன்று!

அவரவர் "பேசிகளில்"
அவரவர் பேச்சுச் சத்தம்;
அடுத்திருப்பது ஒரு ஜடமோ என
அவரவர் கூடுகளின் கவசம் - இன்று!!

எண்ணற்ற இணைய தோழமைகள் -
வார்த்தைப் பரிமாறல் தொடங்கி
வாக்கியப் பரிமாறல்...
உணர்ச்சிப் பரிமாறல் என..
கண்டிப்பாய் தினந்தோறும்
கடமையாய் நிறைவேறும்

ஆனாலும்....

ஆசையோடு செய்துவைத்த
உணவு பற்றி மனைவி...
தன் ஓவியக் கிறுக்கல்களின்
பெருமிதம் பற்றி மழலை...
உளமார உன் அரைமணி
உரையாடலுக்காய் பெற்றோர்..
தொலைபேசி விசாரிப்பில்
தொடரும் நட்பும், சுற்றமும்...


வலைத் தளமா? சிலந்தி
வலைத் தளமா?

முகமறியா தோழமைக்காய்
முத்தெடுக்க நீ குதித்தாய்..
மூழ்கியதை மறந்து விட்டாய்!
கரையினையும் துறந்துவிட்டாய்!

உன் அகம் அறிந்த முகங்களின்
ஆதங்கக் கவிதை இது!
சிந்தித்துப் பாருங்கள்!
சொன்ன சேதி புலனாகும்!




Comments

ANBU
4/4/2009 , 2:51:21 AM

[Comment url] SORRY I DONT HVE ANY WORDS...
I REALLY LOVE IT.... NICE

P.Balakrishnan
5/7/2009 , 1:30:28 PM

[Comment url] கணினி யுகத்தில் கனிவான பேச்சு காணாமல் போய்விட்டது என்று எவரும் வருந்துவதில்லை. எந்திர கதியில் இயங்கும் உலகைக் காப்பாற்ற வல்ல மந்திரம் அன்பு ஒன்றுதான். அதை மீட்டெடுக்க இது போன்ற கவிதைகள் பயன்படும் ! - அரிமா இளங்கண்ணன்

Rishi
5/8/2009 , 12:41:33 AM

[Comment url] அருமை! கவிதைகளையே விரும்பாத என்னையும் சில கவிதைகள் திரும்பிப் பார்க்க வைக்கிறதே!

rasi azhagappan
6/6/2009 , 6:57:42 AM

[Comment url] ணல்ல படைபு.னிராஇய பெச இருக்கிரது உன்னிடம்.

நினைவுப் பந்தலில்

நினைவுப் பந்தலில்

அசைந்தாடும் பூக்களில்
அழகான உன் முகம்...
தவழ்கின்ற பிறைநிலவு
தந்திடும் உன் நுதல் நினைவு...
தழுவிச் செல்லும் தென்றல் எனை
வருடிச் செல்லும் உன் பார்வை போல்...
புள்ளினத்தின் கானமதில்
பூங்குயிலே உன் குரல் தான்....


ஓடுகின்ற நீரலைகள்- நிலவை
தேடுகினற மேகங்கள்
பனி படர்ந்த புல்வெளிகள்
கனி அடர்ந்த மரநிழல்கள்
வெள்ளி மழைச்சாரல்கள்
விண்மீனின் ஒளித்தூறல்கள்
கதிரவனின் சுடரொளியில்...
கடலலையின் கால்தடத்தில்...


மழலைகளின் பூஞ்சிரிப்பில்...
மனம் அடையும் சிறுசிலிர்ப்பில்....
எல்லாமாய்....எல்லாமாய்....
எங்கும் நீ இருக்கையில்....
எனைப் பார்த்து சிரிக்கையில்....
எப்படி உன்னால் சொல்லமுடிந்தது?
'என்னை மறந்து விடுங்கள்' என்று.

Friday, January 9, 2009

தோழியின் பரிசுகள்

தோழியின் பரிசுகள்
******************

முன்பு ஓர் பிறந்த நாளுக்கு
அவள் பரிசளித்த பேனாக்கள்
இன்று எழுத இயலாத நிலையில்...

மற்றுமொரு பிறந்த நாளன்று
தந்த வெள்ளி மோதிரம்
தற்போது கருத்த மோதிரமாய்...

அவள் கொடுத்த வால்பேப்பர்
வீட்டின் கடைக்குட்டி உபயத்தால்
இப்போது பேப்பர் பேப்பராய்...

அவள் கொடுத்த சாவிக்கொத்து
'அழகாய் இருக்கிறதே' என்ற
அண்ணியின் இடுப்பில்...

பிரேம் போட்ட படமொன்று
வீட்டின் வெள்ளையடிப்பு
வைபவத்தில் கடல் சென்ற காயமாய்...

ம்ம்..போனவை போகட்டுமே!

ஆண்டுகள் பல கடந்தும்
ஒவ்வொரு முறையும்
அவள் பரிசாய் அளித்த
நட்பும், நல்தோழமையும்
அழியாத மெருகோடு
அன்று போல் புதுமையாய்...
என்றும் இனிமையாய்...
எனக்கே எனக்காய்...

என் இதயத்தில் பத்திரமாய்!!!

**********************

Wednesday, December 31, 2008

வசந்தத்திற்கு வரவேற்பு!

வசந்தத்திற்கு வரவேற்பு!


ஆண்டவனின் தோட்டத்தில்
ஆண்டென்னும் பூச்செடியில்
அடுத்த மலரின் ஜனனம்! - அதை
ஆவலுடன் வரவேற்போம்!


கடந்த வருடத்தின்
கசப்பான நினைவுகளை
நெஞ்சம் மறக்கட்டும்.
அவற்றில் நாம் கற்ற
பாடம் மட்டும் நினைவில்
என்றும் இருக்கட்டும்!


அதிகாலை விடியலென
ஆனந்த பூபாளமென
அரும்பொன்று மலர்ந்து
ஆண்டாக விரிகிறது! - நம்
ஆசைகள் ஈடேற
ஆசி கொண்டு வருகிறது!


வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்கலமே நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!


கருவெளி" ராச.மகேந்திரன்
12/31/2008 , 1:57:58 AM

[Comment url] இறுதி வரிகளை கடக்கும் போது...தமிழ் புத்தாண்டு வந்ததோ என்று சுவற்று நாட்காட்டியை பார்த்தேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
"கருவெளி" ராச.மகேந்திரன்

Monday, November 24, 2008

புது மனை புகு விழா

கார்த்திகை நன்னாளில்
கற்பகத்தின் காலடியில்
புது மனை புகு விழா!-நம்
மனம் மகிழ் பெரு விழா!!

பாடல் பெற்ற திருமயிலை-இதன்
பெருமை சொல்ல வார்த்தையில்லை!
எண்ணம் போல் அங்கு ஓர் வீடு
ஏற்பட்டது இறை அருளோடு!

அன்பென்னும் வாசலிலே
அழகாக கோலமிட்டு
அக்கறையாய் பூஜைகள்
அத்தனையும் நடந்தேறும்!!

மறையோர்கள் வாழ்த்தொலிக்க
மங்கலமே சூழ்ந்திருக்க
மனங்களுமே களித்திருக்க
மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க!!

பால் பொங்கி வழிந்திருக்க
பாச உறவுகள் துணையிருக்க
நடக்கட்டும் வைபவம்-வரும்
அனைவருக்கும் இனிய அனுபவம்!!


இன்பம் என்றும் தங்கட்டும்!
இறையருள் துணை இருக்கட்டும்!
இன்று போல் என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறோம்!!!

*****************************

Monday, November 17, 2008

நிலாச்சாரல் 17-11-08

கவிதைகள்
- ஹேமமாலினி


வனவாசம்


மகனென்னும் தேசத்தில்
மகிழ்ந்திருக்க உரிமையுள்ள
பாண்டவராய் பெற்றோர்கள்!
ஊசிமுனை நிலம் கூட
உங்களுக்கு இல்லையென
உரைத்திடும் துரியனாய்
உருமாறினாள் மருமகள்!

இதோ - இந்தப் பாண்டவர்கள்
புறப்பட்டு விட்டார்கள்:
குருக்ஷேத்திரம் நோக்கி அல்ல!
மீண்டும் அடுத்த வனவாசத்துக்கு!!

**********************

முரண்

சிக்னலுக்காக
காத்திருக்கும் கார்-
வெளியே
கையேந்தி நிற்கும் சிறுமி;
உள்ளே
கம்பீரமாய் வாலாட்டும் 'டாமி'!

*******************

கருணை

காற்றே!
கருணை செய்க!
ஓலைக் குடிசையின்
ஒற்றை விளக்கில்
ஏழைச் சிறுவனின்
எதிர்காலம்!


. ARUNKUMAR
12/1/2008 , 4:17:25 AM

[Comment url] super i like ur kavithai very much I also have habit of writting kavithai after seeing ur kavithai i also get inspired to write kavithai surely i will do it my friend happy 2 send message to u through nilacharal bye send any messages through my mail id