நினைவுப் பந்தலில்
அசைந்தாடும் பூக்களில்
அழகான உன் முகம்...
தவழ்கின்ற பிறைநிலவு
தந்திடும் உன் நுதல் நினைவு...
தழுவிச் செல்லும் தென்றல் எனை
வருடிச் செல்லும் உன் பார்வை போல்...
புள்ளினத்தின் கானமதில்
பூங்குயிலே உன் குரல் தான்....
ஓடுகின்ற நீரலைகள்- நிலவை
தேடுகினற மேகங்கள்
பனி படர்ந்த புல்வெளிகள்
கனி அடர்ந்த மரநிழல்கள்
வெள்ளி மழைச்சாரல்கள்
விண்மீனின் ஒளித்தூறல்கள்
கதிரவனின் சுடரொளியில்...
கடலலையின் கால்தடத்தில்...
மழலைகளின் பூஞ்சிரிப்பில்...
மனம் அடையும் சிறுசிலிர்ப்பில்....
எல்லாமாய்....எல்லாமாய்....
எங்கும் நீ இருக்கையில்....
எனைப் பார்த்து சிரிக்கையில்....
எப்படி உன்னால் சொல்லமுடிந்தது?
'என்னை மறந்து விடுங்கள்' என்று.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
why? how can she be so cruel?
Post a Comment