கார்த்திகை நன்னாளில்
கற்பகத்தின் காலடியில்
புது மனை புகு விழா!-நம்
மனம் மகிழ் பெரு விழா!!
பாடல் பெற்ற திருமயிலை-இதன்
பெருமை சொல்ல வார்த்தையில்லை!
எண்ணம் போல் அங்கு ஓர் வீடு
ஏற்பட்டது இறை அருளோடு!
அன்பென்னும் வாசலிலே
அழகாக கோலமிட்டு
அக்கறையாய் பூஜைகள்
அத்தனையும் நடந்தேறும்!!
மறையோர்கள் வாழ்த்தொலிக்க
மங்கலமே சூழ்ந்திருக்க
மனங்களுமே களித்திருக்க
மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க!!
பால் பொங்கி வழிந்திருக்க
பாச உறவுகள் துணையிருக்க
நடக்கட்டும் வைபவம்-வரும்
அனைவருக்கும் இனிய அனுபவம்!!
இன்பம் என்றும் தங்கட்டும்!
இறையருள் துணை இருக்கட்டும்!
இன்று போல் என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறோம்!!!
*****************************
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment