வசந்தத்திற்கு வரவேற்பு!
ஆண்டவனின் தோட்டத்தில்
ஆண்டென்னும் பூச்செடியில்
அடுத்த மலரின் ஜனனம்! - அதை
ஆவலுடன் வரவேற்போம்!
கடந்த வருடத்தின்
கசப்பான நினைவுகளை
நெஞ்சம் மறக்கட்டும்.
அவற்றில் நாம் கற்ற
பாடம் மட்டும் நினைவில்
என்றும் இருக்கட்டும்!
அதிகாலை விடியலென
ஆனந்த பூபாளமென
அரும்பொன்று மலர்ந்து
ஆண்டாக விரிகிறது! - நம்
ஆசைகள் ஈடேற
ஆசி கொண்டு வருகிறது!
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க
மனமெல்லாம் நிறைந்திருக்க
மங்கலமே நிலைத்திருக்க
வருகின்ற புத்தாண்டு
வளம் சேர்க்கட்டும்!
கருவெளி" ராச.மகேந்திரன்
12/31/2008 , 1:57:58 AM
[Comment url] இறுதி வரிகளை கடக்கும் போது...தமிழ் புத்தாண்டு வந்ததோ என்று சுவற்று நாட்காட்டியை பார்த்தேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
"கருவெளி" ராச.மகேந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment